அருப்புக்கோட்டை: திருச்சுழி பூமிநாதர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் உள்ள இக் கோயில் பிரமோற்ஸவ விழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருமேனிநாதரும், துணை மாலையம்மனும் வெவ்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வந்து மக்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. பெண்களுக்கு திருமாங்கல்யம் மற்றும் மஞ்சள் , குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 9:45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்தனர்.