பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
நாமக்கல்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் மற்றும் சுற்று வட்டார முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
* நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், காலை 9:00 மணிக்கு மகாசங்கல்பம், 11:30 மணிக்கு, 108 சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி சந்தனக் காப்பு அலங்கரத்தில் அருள் பாலித்தார்.
* நாமக்கல், கடைவீதி சக்தி கணபதி கோவில்,பாலதண்டாயுத பாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, முத்தங்கி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
* நாமக்கல், மாருதி நகர், ராஜ விநாயகர் கோவிலில், கல்யாண சுப்பிரமணியர் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலித்தார்.
* நாமக்கல் அடுத்த, என்.புதுப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
* நாமக்கல், கருங்கல்பாளையம் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு யாகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
* ஆயிர வைசியர் செட்டியார் சமூகம் சார்பில், மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. காலை, 7:30 மணிக்கு, கோவிலில்
இருந்து, பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். தொடர்ந்து, பால், பன்னீர், சந்தனம், தீர்த்தக்குடங்களுடன், காவடி எடுத்துக் கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தனர். மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி வெள்ளிக்கவசத்தில்எழுந்தருளினார்.
இரவு, 7:00 மணிக்கு, புஷ்ப அலங்காரத்தில், சுவாமி வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை சுப்ரமணியசுவாமி எனும் பெயரில் உள்ள முருகன் கோவிலில், தேர் திருவிழா நடந்ததையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 9:00 - 12:00 மணி வரை திருக்கல்யாண வைபோகம், நேற்று (மார்ச்., 21ல்), பால்குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் படிபூஜை செய்தனர். மாலை, திருத்தேர் தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
* ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை என, மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் செய்யப்பட்டது.