பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. கரூர், கிருஷ்ணராய புரத்தில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில்
உள்ளது.
இங்கு, பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி. இந்தாண்டு விழா, நேற்று (மார்ச்.,21ல்) நடந்தது. முருகனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம் ஆகிய பொருட்களை கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.