பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
குளித்தலை: குளித்தலை, ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் தெப்ப உற்சவ திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர், குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தெப்ப உற்சவ திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்), தெப்பகுளத்தில் அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் சுறும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். தொடர்ந்து, தெப்பகுளத்தில் சுவாமிகள் வைக்கப்பட்டு, தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, தெப்பகுளத்தினை இரண்டு முறை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பகுளத்தில் நடுவில் உள்ள மண்டபத்தில் சுவாமி வைக்கப்பட்டு, தீபாராதனை, பூஜை செய்யப்பட்டது.
பின், அலங்கரிக்கப்பட்ட மேடையில், சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். டி.ஆர்.ஓ., சூரிய பிரகாஷ், டி.எஸ்.பி., சுகுமார், ஆர்.டி.ஓ., லியாகத், இந்து சமய அறநிலைய துறை உதவி
ஆணையர் சூரிய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.