பதிவு செய்த நாள்
22
மார்
2019
04:03
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, வெகு விமரிசையாக நேற்று (மார்ச்., 21ல்) கொண்டாடப்பட்டது.நேற்று (மார்ச்., 21ல்) காலை, 4:00 மணிக்கு, கோ பூஜை நடந்தது. 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மகா அபிஷேக பூஜையும் நடந்தது. அதன்பின் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 8:00 மணிக்கு பால்குடம் காவடி அபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதரமாய், சுப்பிரமணிய சுவாமி
தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தார். பகல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன், தங்கத்தேரில்
பவனி வந்தார்.