விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப். 7 ல் நடக்கிறது.
நேற்று இரவு 8:01 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா கமிட்டியினர் முன்னிலையில் யாகம் நடத்தப்பட்டு அம்மனின் வாகனமான சிங்கம் படம் போட்ட கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் வள்ளி திருமண நாடகம், இரவு 10:00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.7 ல் நடக்கிறது. ஏப். 8ல் பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப். 9 இரவு 9:00 மணிக்கு தேரோட்டம் நடக் கிறது. அடுத்த நாள் காலை 7:00 தேர் நிலைக்கு வந்தடைதல், அதற்கடுத்த நாள் மஞ்சள் நீராட்டு நடக்கிறது. விழா நாட்களில் அம்மன் நகர்வலம் வருதல், கலை நிகழ்ச்சி நடக்கும். விழாவை யொட்டி கே.வி.எஸ்., மேல்நிலைபள்ளி மைதானத்தில் பொருட்காட்சி ஏப்.21 வரை நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுகநர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.