பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
02:04
சாத்தூர்: சாத்தூர் முக்குராந்தல் ஸ்ரீமாரியம்மன் , ஸ்ரீகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று (மார்ச்., 31ல்) இரவு நடந்தது. முன்னதாக பங்குனி பொங்கலை முன்னிட்டு கடந்த மார்ச் 24 ம் தேதி நாட்கால் நடுதலுடன் விழா துவங்கியது.
நாள்தோறும் மாரியம்மன் பல்லக்கு, ரிஷபம், சிம்மம்,குதிரை, பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. மண்டக்கப்படியார்கள் சார்பில் நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று (மார்ச்., 31ல்) நடந்தது. இரவு 7:45 மணிக்கு வைப்பாற்றில் இந்து கரகம் எடுத்தும் வரும் நிகழ்ச்சி நடந்தது.
சாத்தூர், படந்தால், குருலிங்காபுரம், அண்ணாநகர், மேலக்காந்திநகர், தென்வடல் புதுத் தெரு, ஆண்டாள்புரம், சத்திரப்பட்டி, பெரிய கொல்லபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பலர் கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின்னர் இரவு 1:00 மணிக்கு காளியம்மன் கோயில் முன்புபக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பொங்கல், பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சாத்தூர் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.