பதிவு செய்த நாள்
02
ஏப்
2019
11:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழா ஏப்.8 காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஏப்.9 முதல் 14 வரை காலை 7:00 மணிக்கு மாசி வீதிகளில் தங்கப்பல்லக்கு, இரவு 7:00 மணிக்கு அம்மன், சுவாமி வீதி உலா நடக்கிறது. ஏப்.15ல் கோயில் ஆறுகால் பீடத்தில் இரவு 8:00 மணிக்கு மேல் 8:24 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏப்.16ல் திக்கு விஜயம். ஏப்.17 காலை 9:50 மணிக்கு மேல் 10:14 மணிக்குள் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்.,18 கீழமாசி வீதியில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.
ஆன்லைன் பதிவுகோயிலின் மேற்குகோபுரம் எதிரே பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ஏப்.8 முதல் 12 வரை இணையதளம் (www.madurai meenakshi.org) மூலம் 200 ரூபாய், 500 ரூபாய் டிக்கெட் பெற பான்கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்குப்புத்தகம், ஓட்டுனர் உரிமம், ரஷேன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அலைபேசி எண், இ மெயில் முகவரி தந்து முன்பதிவு செய்யலாம். அலைபேசி இல்லாதோர் நேரடியாக பிர்லா விஷ்ரம் வந்து முன்பதிவு செய்யலாம்.அதிக விண்ணப்பம் வந்தால் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஏப்.13ல் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஏப்.13 முதல் 16 வரை காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை பிர்லா விஷ்ரம் விடுதியில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.