திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2019 11:04
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மெகா நந்திக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவன், மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரம் பழனி ஆண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர், சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர், பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயில், விளாச்சேரி ஈஸ்வரன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.