பதிவு செய்த நாள்
06
ஏப்
2019
11:04
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நடந்த, இலவச மருத்துவ முகாமில், 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.சென்னை, சாலிகிராமம், சூர்யா மருத்துவமனை நிர்வாகமும் வடபழனி முருகன் கோவில் நிர்வாகமும் இணைந்து, முருகன் கோவிலில், இலவச மருத்துவ முகாமை, நேற்று நடத்தின.இதில், குருக்கள், பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் என, 200க்கும் மேற்பட்டோர், பரிசோதனை செய்து கொண்டனர்.அவர்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பிரச்னை கண்டறியப்பட்டவர்களுக்கு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இது குறித்து, சூர்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர், சி.பி.ஸ்ரீகுமார் கூறியதாவது: கோவிலில் ஓய்வின்றி பணியாற்றுபவர்கள், தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இதில், மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, மத்திய - மாநில அரசுகளின், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.கோவில் துணை கமிஷனர் மற்றும் செயல் அலுவலர், கவிதா பிரியதர்ஷனி கூறுகையில், கோவில் ஊழியர்களுக்கு செய்த மருத்துவ பரிசோதனை பயனுள்ளதாக இருந்தது. வருங்காலங்களிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், என்றார்.