மேலுார்: மேலுார் உறங்கான்பட்டி ராக்காயி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று நடந்தது. மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி வாழவும் பக்தர்கள் 7 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று காலை கோயிலில் துவங்கிய முளைப்பாரி ஊர்வலம் 2 கி.மீ., தொலைவில் உள்ள நாட்டாமுத்தி அய்யனார் ஊருணியை அடைந்தது. அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. வெள்ளலுார், உறங்கான்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.