Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குழந்தை பாக்கியம் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிர்பாராத வருமானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிர்பாராத வருமானம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
04:04

தன்னலம் கருதாமல் பாடுபடும் தனுசு ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக மனம் உடைந்து போய் விட வேண்டாம். இந்த மாதம் சுக்கிரன் ஏப்.16ல் இடம் மாறினாலும் தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். செவ்வாய் மே 6 வரையும், புதன் ஏப். 26 வரையும், மே 12க்கு பிறகும் நற்பலன் தருவர்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். அபார ஆற்றல் பிறக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். ஏப்.16க்கு பிறகு உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும்.  ஏப்.26க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது.  பிரச்னை உருவாகி மறையும். ஏப்.24,25ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம். அவர்களால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.19,20,21ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே1,2,3ல் உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சற்று விலகி இருக்கவும். மே 12க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஏப்.26 வரை கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள்  கவனமாக இருக்க வேண்டும். ஏப்.17,18 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். மே12 க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்  ஒன்று சேருவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே 6க்குள் கேட்டு பெறவும்.

வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். ஏப்.26 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சூரியனால் கடந்த மாதம் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். ஆனால் இந்த மாதம் பகைவர் தொல்லை அதிகரிக்கும். ஆனாலும் பணவிஷயத்தில் எந்த பிற்போக்கான நிலையும் உண்டாகாது. மே 6,7ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். ஏப்.22,23,26,27,28ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே 12க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர்.

கலைஞர்களுக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏப்.16க்கு பிறகு சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலனைக் காண்பர்.  

மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். புதன் சாதகமாக காணப்படுவதால் முன்னேற்றம் உண்டாகும். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவர். ஏப்.27ல் இருந்து மே 12 வரை  மெத்தனமாக இருக்க வேண்டாம் சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். இருப்பினும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பின்தங்கிய நிலை உண்டாகாது.

விவசாயிகள் பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் பெறுவர். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  

பெண்கள் அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர். குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தோழிகள்  ஆதரவுடன் இருப்பர். ஏப்.26க்கு பிறகு குடும்பத்தினருடன் பொறுமையாக விட்டுக் கொடுத்து போகவும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஏப்.29,30ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: ஏப்.17,18,19,20,21,24,25,29,30, மே 6,7,8,9
* கவன நாள்: ஏப்.14, மே10,11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:3,7  
* நிறம்: வெள்ளை, சிவப்பு,

* பரிகாரம்:
*   ஞாயிறன்று நீராடி சூரிய நமஸ்காரம்
*   சனிக்கிழமையில் அனுமனுக்கு விளக்கு
*   சுவாதியன்று லட்சுமி நரசிம்மர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar