பதிவு செய்த நாள்
14
ஏப்
2019
02:04
உடுமலை:உடுமலை, ஆனந்த சாய் கோவிலில், ராம நவமி விழாவையொட்டி, சீதா ராமர் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது.உடுமலை, தில்லை நகர் ஆனந்த சாய்பாபா கோவிலில் பங்குனி மாதம் வரும் நவமி நாளில், ராமர் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம், 20ம்தேதி நாள் துவங்கி, 11 நாட்களுக்கு, இவ்விழா நடக்கிறது. அதன்படி இவ்விழா, கடந்த 3ம்தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
அன்று காலை, 8:15 மணிக்கு அபிேஷகம், ஆராதனை செய்யப்பட்டது. காலை, 11:00 மணிக்கு ராம நாம சங்கீர்த்தனம், விஷ்ணுசகஸ்ரநாமம் மற்றும் சாய்சத்சரித பாராயண நிகழ்ச்சியும் நடந்தன. விழா நாட்களில், பகல், 12:30 மணி, மாலை, 6:30 மணி மற்றும் இரவு, 8:15 மணிக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் கோவிலில், சாய் பஜன் நிகழ்ச்சி நடந்தது. விழா நிறைவாக நேற்று ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.காலை, 7:45 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, சீதாராமர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் ஜி.டி.வி. திருமண மண்டபத்தில் துவங்கின. வேத பாராயணங்கள் முழங்க, சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது.திருமண கோலத்தில் சுவாமிகள், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள், திரளாக பங்கேற்று, பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். திருமண விருந்தாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன், சீதாராமர் ரத உற்சவம் நடந்தது.