பதிவு செய்த நாள்
14
ஏப்
2019
02:04
கிணத்துக்கடவு:தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் இன்று, அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடக்கிறது.விளம்பி வருடம் முடிந்து, விகாரி வருடம் இன்று பிறக்கிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு, இன்று மக்கள் வழிபாட்டுக்காக கோவில்கள் அதிகாலையில் திறக்கப்பட்டு, சிறப்பு அபிேஷக பூஜைகள் நடத்தப்படுகின்றன.தொடர்ந்து, மக்களின் வேண்டுதல்கள், பரிகார பூஜை மேற்கொள்ளப்படுகின்றன. கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுதசுவாமி, கரியகாளியம்மன், மாரியம்மன், சூலக்கல் மாரியம்மன், பெரியகளந்தை ஆதீஸ்வரன், முத்துமலை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நெகமம் நித்தீஸ்வரர், கப்பளாங்கரை பரமசிவன் கோவில் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.