பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
சேலம்: கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் தவக்காலத்தை, கடந்த மார்ச், 6ல் தொடங்கி கடைப்பிடித்து வருகின்றனர். இதில், கடைசி வாரத்தில் கடைப்பிடிக்கப்படும், குருத்தோலை ஞாயிறான நேற்று (ஏப்., 14ல்), சேலம், நான்கு ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில், பங்குத்தந்தை ஜான்ஜோசப் தலைமையில், பேரணி நடந்தது. அதில், ஏராளமானோர் குருத்தோலை ஏந்தி, பாடல்கள் பாடி வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர், கோட்டை லெக்லர், அஸ்தம்பட்டி இமானுவேல் உள்பட, சேலம் மாநகர், மாவட்டத்திலுள்ள, 48 தேவாலயங்களில், குருத்தோலை பேரணி, சிறப்பு திருப்பலி நடந்தது. அதில், திரளானோர் ஜெபித்தனர். வரும், 18ல், புனித வியாழனன்று, பாதம் கழுவுதல், 19ல் புனித வெள்ளியன்று, சிலுவைப்பாதை ஊர்வலத்தை தொடர்ந்து, 21ல், ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.