ஊத்துக்கோட்டை சிவசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2019 03:04
ஊத்துக்கோட்டை, ஏப். 16 பூண்டி ஒன்றியம், மைலாப்பூர் கிராமத்தில் உள்ளது சிவசக்தி அம்மன் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால், பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதை அடுத்து, இன்று (ஏப்., 16ல்),, மாலை, 4:30 மணிக்கு, வாஸ்து பூஜை, கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகளும், நாளை (ஏப்., 17ல்), காலை, 6:00 மணிக்கு, கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது.