மானாமதுரை சித்திரை விழாவில் சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2019 12:04
மானாமதுரை:சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவின் 6 ம் நாள் மண்டகப்படியில் சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மானாமதுரையில் கடந்த 10 ந் தேதி சித்திரை திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு காட்சிஅளிக்கின்றனர். 6 ம்நாள் மண்டகப்படியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இரட்டைரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிகள் தெற்கு ரதவீதியில் உள்ள கழுவேற்றும் பொட்டலில்திருஞானமசம்பந்தர் அவதாரம் குறித்த சொற்பொழிவு நடந்த பின்னர் கழுமரத்தில் கழுவேற்றும்நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் ஏராளமான பெண்கள் சமணர்களின் மணல் சிற்பங்களுக்கு மல்லிகைபூக்களை செலுத்தி வணங்கி சென்றனர்.ஏற்பாடுகளை கீழமேல்குடி கிராமத்தார் மண்டகப்படியினர் செய்திருந்தனர்.