ராஜபாளையம்: ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெரு சித்தி விநாயகர் கோயிலில் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில், சித்திரை மாத விசுகனி பூஜை முன்னிட்டு சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும் நாமசங்கீர்தனமும் நடைபெற்றது. சுவாமி பழங்களால் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.