பதிவு செய்த நாள்
21
ஏப்
2019
01:04
ப.வேலூர்: ப.வேலூர் பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோவிலில், சண்டிகா பரமேஸ்வரி ?ஹாமம் நடக்கிறது. கடந்த, 17ல் துவங்கி பல நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 7:00 - 11:00 மணி வரை வலம்புரி சங்காபிஷேகம், இடம்புரி சங்காபிஷேகம், தொடர்ந்து, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, தீப பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஆவஹந்தி ஹோமம், வித்யா ஹோமம், சண்டிகா பரமேஸ்வரி ஹோமம் நடந்து, தீபாராதனை மற்றும் சுமங்கலி பூஜை நடக்கவுள்ளது.
* ப.வேலூர் தாலுகா, கொந்தளத்தில் உள்ள மஹா மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, கோ - பூஜை, அஸ்வ பூஜை மற்றும் காவிரித்தாய்க்கு வழிபாடு, நவசக்தி ஹோமம், 108 திரவிய ஹோமம் நடந்தது. பக்தர்கள், காவிரி ஆற்றிற்கு சென்று, புனித நீராடி, 1,008 பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, சங்கு புறப்பாடு, விநாயகர், மருந்தீஸ்வரர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு, 108 வலம்புரி, 108 இடம்புரி சங்காபிஷேகம், கலச அபிஷேகம் நடந்தது. பின்னர், வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை; மாலை, 4:00 மணிக்கு காளியம்மன், இறைநேசர் ஆகியோருக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது.