பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
03:04
திருப்பூர்:கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஏப்., 22ல்) காலை, 9:30 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது.
திருப்பூர், காலேஜ் ரோட்டில், கொங்கணகிரியில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத கந்தப்பெருமான் கோவில் உள்ளது. கொங்கு மண்டலத்தின் பழமுதிர்ச்சோலை என்று போற்றப்படும், இக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (22ம் தேதி) நடைபெற உள்ளது.
திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், கோவில் திருப்பணிகள், சிறப்பாக நடந்தேறி யுள்ளன. தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், இப்பணிகளை மேற்கொண்டனர்.புதிதாக அமைக்கப்பட்ட 64, அடி உயர ராஜ கோபுரம் கம்பீரத்துடன் காட்சி தருகிறது. மூலவர், கன்னி மூலை விநாயகர், வாயு மூலை பெருமாள், தேவியருடன் நவக்கிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகள் புதுப்பொலிவுடன்
ஜொலிக்கின்றன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த, 18 ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று (ஏப்., 21ல்) காலை நான்கு வேதங்களின் நாயகனுக்கு நான்காம் கால யாக பூஜையும்,
மாலையில் ஐங்கரன் தம்பிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு மருந்து சாத்துதல், ஸ்தூபி ஸ்தாபனம், இரவு, 8:30 மணிக்கு, தீபாராதனை, பிரசாதம்
வழங்குதல் நடந்தது.மகா கும்பாபிஷேகம் இன்று (ஏப்., 22ல்) அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனுக்கு ஆறாம் கால யாக பூஜைகள் நடக்கிறது. காலை, 8:45 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை உடன் கலசங்கள் புறப்பாடு நடைபெறும். காலை, 9:30 மணிக்கு கோவில் விமானம் மற்றும் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் மதுரை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளையினர் முன்னிலையில், கோலாகலமாக நடக்கிறது.
காலை, 10:00 மணிக்கு மூலாலய மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை, 5:00 மணிக்கு மஹா அபிஷேகம், திருக்கல்யாணம், கந்தப்பெருமான் திருவீதியுலா நடக்கிறது.பக்தர்கள் குவிகின்றனர்மகா கும்பாபிஷேகத்தையொட்டி, கொங்கணகிரி கோவிலில் நள்ளிரவு துவங்கி, இன்று (ஏப்., 22ல்) அதிகாலையில் இருந்து பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் குவிந்து வருகின்றனர். மாநகரக் காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.கும்பாபிஷேகத்தையொட்டி மின்னொளியில் கோவில் ஜொலிக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும், அனைத்து வசதி களையும், கோவில் நிர்வாகம் செய்துள்ளது.