பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
03:04
நெகமம்:பொள்ளாச்சி அடுத்த நெகமம் - தளி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள மகாலட்சுமி நகரில் பந்தள சாஸ்தா திருக்கோவில் திருப்பணிகள் நிறைவு
பெற்றுள்ளது.
கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, 20ம் தேதி மாலை, மங்கள இசையுடன், முதல்கால யாகபூஜை துவங்கியது.நேற்று (ஏப்., 21ல்), காலை, 11:00 மணிக்கு இரண்டாம் கால யாக
பூஜையும், மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது.இன்று, ஏப்., 22ம் தேதி, காலை, 9:10 மணி முதல், 10:10 மணிக்குள், விநாயகர், முருகர், கருப்புசாமி, கடுத்தசாமி ஐயப்ப சுவாமிக்கும் கோபுர திருக்குட நன்னீராட்டு மற்றும் மகா கலச நன்னீராட்டு, மகா பேரொளி வழிபாடு நடக்கிறது.விழாவுக்கு, சபரிமலை முன்னாள் மேல்சாந்தி எழிக்கோடு ஸ்ரீசசி நம்பூதிரி முன்னிலை வகிக்கிறார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமையில் விழா நடக்கிறது.காலை, 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை வழிபாடும், தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு படி பூஜையும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருக்குட நன்னீராட்டு விழா
ஏற்பாடுகளை, நெகமம் பந்தள சாஸ்தா பூஜா சங்கத்தினர் செய்துள்ளனர்.