பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
01:04
கடலூர்: கடலூர் அடுத்த பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஏப்., 22ல்) நடந்தது.
விழாவையொட்டி, காலை 7 மணிக்கு நான்காவது கால பூஜை, ஹோமம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, 9 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.காலை 10:10 மணிக்கு ராஜ கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம், பரிவாரங்கள் மூலவர் அம்பாளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 10 மணிக்கு அம்பாள் வாண வேடிக்கையுடன் வீதியுலா நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.