பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
01:04
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு மதுரா சென்னிநத்தம் கிராமத்தில் விஜயகணேசர், அய்யனார், பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வெள்ளாற்றிலிருந்து புனிதநீர் கலசங்கள் கொண்டு வரப்பட்டன. மறுநாள் 20ம் தேதிகாலை 8.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நடந்தது. மாலை 5.00 மணிக்கு வாஸ்துசாந்தி, அங்குரார்பனம், ரக்ஷா பந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் திரவியாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் 21ம் தேதி பல்வேறு யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று (ஏப்., 22ல்) காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், நான்காம் கால யாக பூஜை, ஹோமங்கள் பிரம்மசுத்தி, நாடிசந்தனம் நடந்தது. 9.30 மகா பூர்ணாகுதி, தீபாராதனை கலசம் புறப்பாடாகி 10.00 மணிக்கு விஜயகணேசர், அய்யனார், பிடாரியம்மன், துர்கை அம்மன் கோவில் விமான கலசங்களுக்கும், நவக்கிரகம், அங்காளம்மன், சப்தகன்னியம்மன், பாவாடைராயன், வீரனார், மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை சென்னிநத்தம் கிராம பொதுமக்கள் செய்தனர்.