பதிவு செய்த நாள்
26
ஏப்
2019
01:04
மாமல்லபுரம்:திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள், நேற்று (ஏப்., 25ல்), திருத்தேரில் வீதியுலா சென்றார்.நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், 18ல், சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கி, தினமும், காலை, இரவு, உற்சவங்கள் நடக்கின்றன.
முக்கிய உற்சவமாக, 24ல், சுவாமி, கருட வாகன சேவையாற்றினார். நேற்று (ஏப்., 25ல்), சுவாமி, திருத்தேரில் வீதியுலா சென்றார். கோவிலில், காலை, ரத பிரதிஷ்டை ஹோமம் நடந்து, நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன், அலங்கார திருத்தேரில், 9:45 மணிக்கு எழுந்தருளினார். சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் வீதியுலா சென்ற சுவாமியை, பக்தர்கள் தரிசித்தனர்.