ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த வடகரை அருகே நரிக்குளம் கிராமத்தில் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று இரவு கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவங்கி முளைப்பாரி வளர்த்தனர். நேர்த்திகடன் வேண்டிக் கொண்ட பக்திர்கள் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்குஅக்னி சட்டி ஏந்தி வீதியை சுற்றி வந்தனர். நள்ளிரவு 1:00 மணிக்கு காளியம்மன் விசேஷ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். வீடுகளில் முளைப்பாரி கரகம்வளர்த்திருந்த பக்தர்கள் சுவாமி முன் ஊர்வலமாக சென்று கோயிலில் சேர்த்தனர். கரிசல் குயில் கிருஷ்ணசாமி குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்றுகாலை முடிகாணிக்கை நேர்த்தி கடன், மாலை கயிறு குத்துதல், கரகாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் கடைசி நாளான இன்று மஞ்சள் நீராட்டுடன் முளைப்பாரி கரைத்து விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை நாட்டாமை தங்கவேல் தலைமையில் விழா கமிட்டியினர், அப்பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.