பதிவு செய்த நாள்
03
மே
2019
02:05
ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழாவையொட்டி, மாலை, 4:30 மணிக்கு சிவபெருமான், நந்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், நந்திக்கு அருகம்புல், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை
காட்டப்பட்டது.
இதேபோல், தாராட்சி லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ் வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.
* திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு, திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு, நேற்று 2ல், மாலை நடந்தது.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து, சிவபெருமான் ரிஷப வாகனத்தில், உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
பூங்கா நகர், சிவ விஷ்ணு கோவிலில் எழுந்தருளி உள்ள புஷ்பவனேஸ்வரர், பெரியகுப்பம், ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தங்காதலி அம்மன்
உடனாய வாசீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.காக்களூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை பாதாள லிங்கேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை சிவகாமி சுந்தரி சமேத
சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.