கடலுார்:கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு ேஹாமம் நடந்தது.
தமிழகத்தில் மழை வேண்டி மாவட்டம் வாரியாக முக்கிய கோவில்களில் சிறப்பு ஹோமம் நடத்த வேண்டுமென, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. அதன்படி, கடலுார் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.வேத மந்திரங்கள் முழங்க ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. கோவில் உள் பிரகாரத்தில் கலசங்கள் வலம் வந்து பாடலீஸ்வரருக்கு கலச அபிஷேகம் நடந்தது.இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.