இந்து சமய அறநிலைத்துறை உத்தரவின் பேரில், அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி வருணபூஜை, நந்தி பூஜை,அமிர்த வர்ஷிண, மேக வர்ஷிணி, கேதாரி, ஆனந்தபைரவி,ரூப கல்யாணி ஆகிய ராகங்களில் பாடல்கள் பாட வேண்டும்என்றும், ஓதுவார்களைக் கொண்டு தேவாரப் பதிகங்களைப்பாட வேண்டும் என கூறியிருந்தனர். இதன்படி ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில்உள்ள நாகநாதசுவாமி கோயிலில் சிவபெருமானுக்கு வருண அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி அம்மனுக்கும் கும்பங்கள்வைத்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. தேவாரப் பதிகங்கள்பாடப்பட்டு, மழை வேண்டி 2 மணி நேரத்திற்கு மேலாக வருணயாகம்நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளைசெயல் அலுவலர் வைரவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.