பதிவு செய்த நாள்
09
மே
2019
02:05
உடுமலை:போடிபட்டி தன்னாசியப்பன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை அருகே போடிபட்டியில், லட்சுமியம்மன், வேட்டைக்கார சுவாமி சமேத தன்னாசியப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்றுமுன்தினம் (மே., 7ல்) துவங்கியது.
முதல் கால யாக வேள்வி, தீபாராதனை இரவு, 8:00 மணிக்கு நடந்தது. நேற்று (மே., 7ல்), காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, வேத பாராயணம் நடந்தது. காலை, 6:30 மணிக்கு நாடி சந்தானம் மற்றும் கடங்கள் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, 7:30 மணிக்கு மும்மூர்த்திகளுக்கும் தீர்த்தம் விடுதல் மற்றும், 8:30 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதில், போடிபட்டி அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.