பதிவு செய்த நாள்
09
மே
2019
02:05
மடத்துக்குளம்:கொழுமம் கோட்டை மாரியம்மன் திருவிழாவில், திரளான பக்தர்கள் வருகை தருவதால் நகரமே களைகட்டியுள்ளது.
மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், பல நூறு ஆண்டுகள், பழமை வாய்ந்தது. அமராவதி ஆற்றங்கரை ஓரம் உள்ள இந்த கோவிலில், ஆண்டு தோறும் கோடையில் திருவிழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு, கடந்த மாதம் 24ம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது.கடந்த 4ம் தேதி இரவு, 11:00 மணிக்கு பூவோடு எடுத்து வந்து, திருக்கம்பத்தில் வைத்தல் நிகழ்ச்சிநடந்தது. தொடர்ந்து கடந்த 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு, அன்னாபிஷேகம், அம்மன் ஊஞ்சல், இரவு 12:00 மணிக்கு திருக்கம்பத்தில் பூவோடு வைத்து வழிபடுதல் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 7ல், பொதுமக்கள் பூவோடு எடுத்தலும், நேற்றிரவு 8ல், இரவு, 9:00 மணிக்கு புஷ்பரதத்தில் சாமி புறப்பாடு நடந்தது.இன்று 9ல், அதிகாலை 4:00 மணிக்கு திருக்கம்பத்தை அமராவதி நதியில் சேர்த்தல், காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீர் ஊர்வலம், சாமி மண்டபப்படி புறப்பாடு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சிறப்பு வழிபாடாக வரும் 15ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது.