பதிவு செய்த நாள்
10
மே
2019
02:05
காஞ்சிபுரம்:மழை வேண்டி, ஹிந்து அறநிலையத்துறை கோவில்களில், சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், ஏகாம்பரநாதர் கோவிலில், இந்நிகழ்ச்சி
நடைபெற்றது.
மழை வேண்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று (மே., 9ல்)காலை, சிறப்பு யாகம் நடத்தப் பட்டது. பின், கோவில் குளத்தில் எழுந்தருளியுள்ள தீர்த்தேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப் பட்டது.இந்நிகழ்ச்சியில், மழை பகவானை வேண்டி, ஓதுவார்கள், சைவ குரவர்களான திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் பாடிய பதிகத்தை, மழைக்கான ராகத்தில் பாடினர். அதே போல், ஏகாம்பரநாதர் கோவிலிலும், இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது.