பதிவு செய்த நாள்
10
மே
2019
02:05
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது.ராமானுஜர், சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தார். இந்நாளான நேற்று, (மே., 9ல்), இக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு, பெருமாள், தேவியர், ராமானுஜர் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாடு நடந்தது.தொடர்ந்து, திருவாய்மொழி சாற்றுமறை சேவை யாற்றி, ராமானுஜருக்கு, பெருமாள், பரிவட்டமரியாதை அளித்தார்.
குன்னத்தூர் பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இக்கோவில் சார்பில், ஸ்ரீபெரும்புதூர் கோவிலில், இன்று (மே., 10ல்), பரிவட்டம், பிரசாதம்வழங்கப்படுகிறது.