பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
கோபி: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், 76வது ஆண்டு, 1,008 சங்காபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை விழா, நேற்று (மே., 10ல்) நடந்தது. கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், 1942ல் முதல் கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது முதல், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், லட்சார்ச்சனை விழா நடக்கிறது. அதன்படி, 76வது ஆண்டு, லட்சார்ச்சனை விழா, கடந்த, 8ல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1,008 சங்காபிஷேகம் நேற்று (மே., 10ல்) காலை நடந்தது. புனிதநீர் அடங்கிய கலசத்துடன், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள், கோவில் வளாகத்தை ஊர்வலம் வந்தனர். பின், கலசம் மற்றும் சங்குகளில் இருந்து, புனிதநீரை கொண்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.