பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், வைகாசி விசாக தேரோட்டத்துக்காக, புதிதாக செய்யப்பட்ட மரத்தேருக்கு, நேற்று (மே., 10ல்)குடமுழுக்கு செய்யப்பட்டது. ஈரோட்டில், புகழ் சோழ மன்னரால் கட்டப்பட்ட, வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா வரும், 15ல் நடக்கிறது. கடந்த, 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து
வருகிறது. விழாவை முன்னிட்டு, பக்தர் ஒருவர் கோவிலுக்காக உபயமாக கொடுத்த தேர், கோவிலுக்கு நேற்று (மே., 10ல்) கொண்டு வரப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், ராஜகோபும் முன் நிறுத்தப்பட்டு, பிரதிஷ்டை பூஜை மற்றும் கலச தீர்த்தத்தால் குடமுழுக்கு செய்யப் பட்டது. அதை தொடர்ந்து, சூரிய பூஜை, வாஸ்து பூஜை, திருஷ்டி கழித்து மஹா தீபாராதனை
காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, யாகசாலை பூஜை, சந்திரசேகரர் அபிஷேகம், மாலையில் நவசந்தி பலி, சோமாஸ்கந்தர் வீதியுலா நடந்தது.