பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
கோபி: சாரதா மாரியம்மன் கோவிலில், கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி, மக்கள் வழிபட்டனர். கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 2ல், பூச்சாட்டுதலுடன்
துவங்கியது. கடந்த, 8ல் திருக்கம்பம் நடப்பட்டது. தினமும் இரவு, 8:00 மணிக்கு, பூச்சட்டி (பூவோடு) கம்பத்தில் வைத்து பூஜை நடக்கிறது. தினமும், காலை 7:00 மணிக்கு, கம்பத்தில்
இருந்து, பூவோடு எடுக்கப்படுகிறது. கம்பம் நடப்பட்டது முதல், பள்ளி குழந்தைகள் முதல், பெண்கள் வரை, கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்று (மே., 10ல்) வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமான பெண்கள் புனித நீர் ஊற்றினர். பின், கம்பத்துக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர்.