பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
அந்தியூர்: ஸ்ரீமத் ராமானுஜரின், 1,002வது அவதார தினத்தையொட்டி, அந்தியூர், தவிட்டுப் பாளையம், மைலம்பாடி, புரசைக்காட்டூர், வெடிக்காரன் பாளையம், பெருமுகை புதூர், சந்தி பாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடந்தது.
பக்த பாகவத பஜனை குழுவினர், பாடல்களை பாட, கோலாட்டம் ஆடியபடி பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் தொடங்கிய, கருட சேவை வாகன ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோட்டை அழகராஜா பெருமாள் கோவிலில் முடிந்தது. இதை தொடர்ந்து பெருமாள் கோவிலில், சிறப்புப் பூஜை நடந்தது.