பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடி, வினைதீர்க்கும் விநாயகர் கோவிலில், சித்திரை பண்டிகை, 37ம் ஆண்டு நிறைவு விழா, நேற்று (மே., 10ல்) காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, வசிஷ்ட நதியிலிருந்து பம்பை மேளம் முழங்க, சக்தி அழைத்தல் நடந்தது. ஏராளமான பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலை வந்தடைந்தனர்.
பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (மே., 11ல்) மதியம், ஊரணி பொங்கல் வைத்தல், மாலை,
குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்கும். நாளை (மே., 12ல்), விளையாட்டு போட்டி, மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடையும்.