விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா துவங்கியது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் (மே., 9ல்) மாலை அங்குரார்பணம், வாஸ்துசாந்தி, கருடபிரதிஷ்டை நடந்தது. தொடர்ந்து நேற்று (மே., 10ல்) காலை 8:15 மணியளவில், அம்ச வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து தினமும் ஒவ்வொரு வாகனத் தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 18ம் தேதி காலை 7:45 மணிக்கு மேல் திருத்தேர் உற்சவம் நடக்கிறது.