திருவாடானை:தொண்டி சிதம்பரேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு 1008 விளக்கு பூஜை நடந்தது. மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடந்த பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அண்ணாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் விளக்கேற்றி பக்தி பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.