விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா, வி.கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.இக்கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி தேரோட்டமும், பகல் 12:00 மணியளவில் மயானக் கொள்ளை உற்சவமும் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 1:30 மணியளவில் காத்தவராயனுக்கு கழுமரம் ஏறுதல், 3:00 மணிக்கு பொங்கலிட்டு படையல் நடந்தது.இரவு 10:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் நாடகக்குழு தேவக்கண்ணன் குழுவினர் சார்பில் தெருக்கூத்து நடந்தது.தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டு விழா, நாளை இரவு இடும்பனுக்கு கும்பம் படைத்தல் நடக்கிறது.