சிவகாசி:திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் , பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.திருத்தங்கல் பகுதியில் மழை இன்றி அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதிப்படுவதோடு குடிநீர் பற்றாக்குறையாலும் மக்கள் தவிக்கின்றனர். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கிறது. இதே நிலைதான் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. இதனால் திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள், செங்கமலத்தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அனந்த சயன பட்டர் மற்றும் ஸ்தலத்தர்கள் யாகம் நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், தக்கார் தனலட்சுமி, செயல் அலுவலர் லட்சுமணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.