பதிவு செய்த நாள்
13
மே
2019
12:05
உத்திரமேரூர்:ஆலஞ்சேரி ஒளவையார் கோவிலில், கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று (மே., 12ல்) கோலாகலமாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், தோட்டநாவல் ஊராட்சிக்கு உட்பட்டது, ஆலஞ்சேரி கிராமம். இங்கு, ஒளவையாருக்கென கோவில் கட்டி, பல ஆண்டுகளாக, இப்பகுதியினர் வழிபடுகின்றனர். சிவனை போற்றி, ஒவ்வொரு ஊராக பாடல்கள் பாடி வந்த ஒளவையார், இந்த ஆலஞ்சேரி கிராமத்தில், மதிய வேளையில், ஒருநாள் கடந்துள்ளார்.அப்போது, அவரது தாகத்திற்கு, அங்கிருந்த மக்கள் தண்ணீர் கொடுத்தும், கூல் கொடுத்தும் உபசரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆலஞ்சேரியில், ஒளவையார் அமர்ந்து கூழ் குடித்த இடத்தில், கோவில் கட்டி, ஔவையாரை வழிபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை மாத கூழ் வார்த்தல், இக்கோவிலில், 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று (மே., 12ல்) மதியம், மலரால் அங்கரிக்கப்பட்ட ஒளவையார், அப்பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்த போது, வீடுகள் தோறும் தீபம் ஏற்றி, பொதுமக்கள் வழிபட்டனர்.தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, ஒளவையார் கோவிலில், கூழ்வார்த்தல் விழா நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாமந்திபுரம்காஞ்சிபுரம் அடுத்த, சாமந்திபுரம் கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று (மே., 12ல்) காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு
அலங்காரம் நடந்தது.காலை, 10:00 மணிக்கு கரக வீதியுலா, மதியம், 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.