மங்கலம்பேட்டை பெருமாள் கோவில் தேர் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2019 03:05
மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கொடியேற்ற த்துடன் துவங்கியது. மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் (11ம் தேதி) காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து தினசரி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும் 17ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 18ம் தேதி இரவு 8:00 மணியளவில் பரிவேட்டை, 19 ம் தேதி காலை 6:00 மணியளவில் தேர் திருவிழா நடக்கிறது. 20ம் தேதி இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.