திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருநெல்வேலி, நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருஷாபிஷேக விழா இன்று (மே.,14) நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு சுவாமி மற்றும் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு ரதவீதிகளில் பவனி நடைபெற உள்ளது.