ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு அஷ்டாபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.மூலவர் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, சங்கரன் சங்கரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தது. கோயில் தலைமை குருசாமி மோகன் சாமி தலைமையில் சபரிமலை புனித யாத்திரைக்காக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.