பதிவு செய்த நாள்
16
மே
2019
12:05
போத்தனுார்: சுந்தராபுரம் அருகே சாரதா மில் லைன் மாரியம்மன் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று சக்தி கரக ஊர்வலம் மற்றும் மாவிளக்கு வழிபாடு நடந்தன.
மாரியம்மன் கோவிலின், 71ம் ஆண்டு விழா கடந்த, 7ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு, அம்மன் அழைத்தல், திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் உள்ளிட்டவை நடந்தன. நேற்றுகாலை பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, சக்தி கரக ஊர்வலம் துவங்கி, சங்கம் வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. மதியம் அம்மனுக்கு பால் அபிஷேகமும், மாலை யில் மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி எடுத்தல்,அன்னதானம், கம்பம் எடுத்தல் உள்ளிட்டவையும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த அம்மனை, திரளானோர் வழிபட்டுச் சென்றனர். இன்று மாலை, மஞ்சள் நீர் உற்சவம், மகா அபிஷேக பூஜைநடக்கின்றன.நாளைமதியம் அன்னதானம், உச்சி பூஜை உள்ளிட்டவையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.