பதிவு செய்த நாள்
17
மே
2019
02:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, நேற்று (மே., 16ல்) காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக, அலங்காரமும் தொடர்ந்து 6:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களின் ஸ்ரீருத்ரம், திருவாசகம் முழங்க சுவாமி ஆலயம் வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.