செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர்.
நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரரை வழிபட்டனர்.பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ் வரருக்கு அபிஷேக, அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி கோவில் உலாவும் நடந்தது.முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு அபிஷேக, அலங்காரமும்; மாலை 6:00 மணிக்கு சுவாமி கோவில் உலா நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.செஞ்சி, கிருஷ்ணா புரம் சுந்தரவிநாயகர் கோவில் ஈஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் அபிஷேகமும், மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.