பதிவு செய்த நாள்
17
மே
2019
02:05
காஞ்சிபுரம்: வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று (மே., 17ல்) காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்துக்கு, இன்று (மே., 17ல்) காலை, 4:10 - 5:30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது.தொடர்ந்து, தங்க சப்பரத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி, ராஜ வீதிகளில் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழாவின் முக்கிய உற்சவமான, மூன்றாம் நாளில், கருடசேவை நடைபெறுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறும். பின், 7ம் நாள், தேர் திருவிழா, விமரிசையாக நடைபெறுகிறது. வரும், 26ல், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.