விபரீதமான பலன் உண்டாகும். இந்திரனைக் கொன்று பழி தீர்க்க நல்ல வலிமை வாய்ந்த மகன் பிறக்க வேண்டும் என்று ஒரு அரக்கன் யாகம் செய்தான். மந்திரங்கள் தவறாக உச்சரிக்கப்பட்டன. தவறாக உச்சரிக்கப்பட்டதால் மந்திரத்தின் பொருள்மாறியது. இந்திரனைக் கொல்ல வேண்டும் என்று யாகம் செய்யப் போக இந்திரனால் கொல்லப்பட வேண்டும் என்ற விபரீத அர்த்தத்தில் யாகம் நடந்து விட்டது. அரக்கனுக்கு விருத்தாசுரன் மகனாகப் பிறந்தான். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. காவிஷ்ணுவின் துணையுடன் இந்திரன் விருத்தாசுரனை கொன்றுவிட்டான். இப்போது புரிகிறதா! தெரிந்தவர்களிடம் கேட்டு, மந்திரங்களை நல்ல முறையில் உச்சரித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். நமது குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தை அவசியம் கற்பியுங்கள்.